அனைவரும் வருக
ஒவ்வொரு நாளும் கணினியின் உபயோகம் பரவலாகிக் கொண்டே வருவதைப் பார்க்கிறோம். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொழில்நுட்பப் புரட்சியாக இணையம் திகழ்கிறது. தொடக்கத்தில் ஆங்கிலம் மட்டுமே கோலோச்சிவந்த இந்த ஊடகத்தில் இன்று அழகுத் தமிழில் அனைத்தும் காணக் கிடைக்கின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்கள், சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் திருக்குர்ஆன் நபிமொழி தொகுப்புகள் இணையத்தின் வாயிலாக நம் திரைக்கு வந்து நம் வாசிப்புக்குத் தீனி போடுகின்றன. அதிலும் புலம் பெயர்ந்து வாழும்
இஸ்லாமிய தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் இஸ்லாமிய தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.
bravenet.com